என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கொழும்பு விமான நிலையம்
நீங்கள் தேடியது "கொழும்பு விமான நிலையம்"
இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட 9 தற்கொலை பயங்கரவாதிகளுள் ஒருவர் பெண் என இலங்கை பாதுகாப்புத்துறை மந்திரி ருவான் விஜயவர்தனே கூறியுள்ளார். #SrilankanBlasts #WomanSuicideBomber
கொழும்பு:
இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தகர்க்கப்பட்டன. பிரார்த்தனைக்காக தேவாலயங்களில் திரண்டிருந்த பொதுமக்கள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் 359 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார். #SrilankanBlasts #WomanSuicideBomber

தாக்குதல்கள் தொடர வாய்ப்புள்ளது எனவும், ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எச்சரித்துள்ளார். எனவே, இலங்கையில் வாகன சோதனை மற்றும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை நடத்தப்பட்ட வாகன சோதனையில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை பாதுகாப்புத்துறை மந்திரி ருவான் விஜயவர்த்தனே கூறியதாவது:
தலைநகர் கொழும்புவில் உள்ள சவாய் திரையரங்கு அருகே மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு கண்டறியப்பட்டது. இதனை நிபுணர்கள் அப்புறப்படுத்தி பாதுகாப்பாக வெடிக்கச் செய்தனர். இரண்டு குழுக்களாக பிரிந்து பயங்கரவாத கும்பல் செயல்படுவதாக தெரிய வந்துள்ளது.
இதில் ஒரு குழுவின் தலைவர் மனித வெடிகுண்டாக மாறி உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இன்னும் 2 நாட்களில் இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் குறித்து உறுதி செய்யப்படும். இந்த தாக்குதல்களில் ஈடுபட்ட 9 தற்கொலை பயங்கரவாதிகளுள் ஒருவர் பெண் என தெரிய வந்துள்ளது. இலங்கையில் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார். #SrilankanBlasts #WomanSuicideBomber
இலங்கையின் தலைநகரான கொழும்புவில் இன்று காலை மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை மந்திரி ருவான் விஜயவர்த்தனே தெரிவித்துள்ளார். #BombFoundinSrilanka #RuwanWijewardene
கொழும்பு:
இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தகர்க்கப்பட்டன. பிரார்த்தனைக்காக தேவாலயங்களில் திரண்டிருந்த பொதுமக்கள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் கொத்துக் கொத்தாக உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் நேற்று மாலை நிலவரப்படி, 321 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.
ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எச்சரித்துள்ளார். எனவே, வாகன சோதனை மற்றும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை நடத்தப்பட்ட வாகன சோதனையில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை பாதுகாப்புத்துறை மந்திரி ருவான் விஜயவர்த்தனே கூறுகையில், ‘தலைநகர் கொழும்புவில் உள்ள சவாய் திரையரங்கு அருகே மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு கண்டறியப்பட்டது. இதனை நிபுணர்கள் அப்புறப்படுத்தி பாதுகாப்பாக வெடிக்கச் செய்தனர்.
இரண்டு குழுக்களாக பிரிந்து பயங்கரவாத கும்பல் செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. இதில் ஒரு குழுவின் தலைவர் மனித வெடிகுண்டாக மாறி உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இன்னும் 2 நாட்களில் இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் குறித்து உறுதி செய்யப்படும்’ என கூறினார். #BombFoundinSrilanka #RuwanGunasekara

அதன்பின்னர், பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் சிகிச்சை பலனின்றி மேலும் பலர் உயிரிழந்தனர். இன்று காலை நிலவரப்படி உயிரிழப்பு 359 ஆக உயர்ந்துள்ளது. இதில் 45 பேர் குழந்தைகள் ஆவர்.
ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எச்சரித்துள்ளார். எனவே, வாகன சோதனை மற்றும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை நடத்தப்பட்ட வாகன சோதனையில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை பாதுகாப்புத்துறை மந்திரி ருவான் விஜயவர்த்தனே கூறுகையில், ‘தலைநகர் கொழும்புவில் உள்ள சவாய் திரையரங்கு அருகே மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு கண்டறியப்பட்டது. இதனை நிபுணர்கள் அப்புறப்படுத்தி பாதுகாப்பாக வெடிக்கச் செய்தனர்.
இரண்டு குழுக்களாக பிரிந்து பயங்கரவாத கும்பல் செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. இதில் ஒரு குழுவின் தலைவர் மனித வெடிகுண்டாக மாறி உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இன்னும் 2 நாட்களில் இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் குறித்து உறுதி செய்யப்படும்’ என கூறினார். #BombFoundinSrilanka #RuwanGunasekara
இலங்கையில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு எத்தகைய உதவியும் செய்ய தயாராக இருப்பதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது. #SriLankablasts #InterPol
கொழும்பு:
இந்த கொடூர தாக்குதல்கள் தொடர்பாக போலீசார் 24 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த, சுப்ரீம் கோர்ட் நீதிபதி விஜித் மலால்கோடா தலைமையில் முன்னாள் போலீஸ் ஐ.ஜி. என்.கே.இலங்கக்கூன், சட்டம் ஒழுங்கு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜெயமன்னே ஆகியோரை கொண்ட சிறப்பு குழுவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அமைத்துள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு உதவ இன்டர்போல் முன்வந்துள்ளது. இதுதொடர்பாக இன்டர்போல் பொதுச்செயலாளர் ஜுர்கென் ஸ்டாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் நண்பர்கள், குடும்பங்களுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
கொடூரமான இந்த தாக்குதல் சம்பவத்தினை சர்வதேச போலீசார் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம். தேசிய அளவில் அதிகாரிகள் நடத்தும் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம்’ என பதிவிட்டுள்ளார். #SriLankablasts #InterPol
இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையின்போது 3 தேவாலயங்கள், 4 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதுவரை யாரும் பொறுப்பேற்காத இந்த தாக்குதல்களில் 5 இந்தியர்கள் உள்பட 290 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கொடூர தாக்குதல்கள் தொடர்பாக போலீசார் 24 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த, சுப்ரீம் கோர்ட் நீதிபதி விஜித் மலால்கோடா தலைமையில் முன்னாள் போலீஸ் ஐ.ஜி. என்.கே.இலங்கக்கூன், சட்டம் ஒழுங்கு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜெயமன்னே ஆகியோரை கொண்ட சிறப்பு குழுவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அமைத்துள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு உதவ இன்டர்போல் முன்வந்துள்ளது. இதுதொடர்பாக இன்டர்போல் பொதுச்செயலாளர் ஜுர்கென் ஸ்டாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் நண்பர்கள், குடும்பங்களுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
கொடூரமான இந்த தாக்குதல் சம்பவத்தினை சர்வதேச போலீசார் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம். தேசிய அளவில் அதிகாரிகள் நடத்தும் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம்’ என பதிவிட்டுள்ளார். #SriLankablasts #InterPol
இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக 24 பேர், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். #SriLankablast #Colomboblast
கொழும்பு:
இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பாதுகாப்பு முகமைகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை செய்தித்தொடர்பாளர் ருவான் குணசேகரா தெரிவித்துள்ளார். அவர்களை கைது செய்த போலீசார், தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் கொழும்புவின் கட்டுநாயக்க விமான நிலையம் அருகே இன்று காலை போலீசார் நடத்திய சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதனை மீட்ட போலீசார் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியோடு செயலிழக்கச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #SriLankablast #Colomboblast
இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த கோர தாக்குதல்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக இலங்கை ஊடகங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளன. மேலும் இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பாதுகாப்பு முகமைகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை செய்தித்தொடர்பாளர் ருவான் குணசேகரா தெரிவித்துள்ளார். அவர்களை கைது செய்த போலீசார், தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள், கடந்த 3 மாதங்களாக தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 500 பேர் படுகாயமுற்றனர். #SriLankablasts #Colomboblasts
கொழும்பு:
இந்த கோர தாக்குதல்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக இலங்கை ஊடகங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளன.
இதில் லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகிய 3 இந்தியர்கள் உயிரிழந்ததாக இலங்கையில் உள்ள நேஷனல் மருத்துவமனை தெரிவித்தது. இதனை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். தற்போது 5 இந்தியர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #SriLankablasts #Colomboblasts
இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த கோர தாக்குதல்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக இலங்கை ஊடகங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளன.
இதில் லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகிய 3 இந்தியர்கள் உயிரிழந்ததாக இலங்கையில் உள்ள நேஷனல் மருத்துவமனை தெரிவித்தது. இதனை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். தற்போது 5 இந்தியர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #SriLankablasts #Colomboblasts
இலங்கையில் நேற்று 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த நிலையில், கொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்றை கைப்பற்றிய போலீசார் அதனை செயலிழக்கச் செய்தனர். #SriLankaAttacks
கொழும்பு:
இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள், குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 215 பேர் உயிரிழந்தனர். 450-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இவற்றில் சில சம்பவங்கள் தற்கொலப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 6 மணி முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கொழும்புவின் கட்டுநாயக்க விமான நிலையம் அருகே போலீசார் நடத்திய சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதனை மீட்ட போலீசார் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியோடு செயலிழக்கச் செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. #SriLankaBlasts #SriLankaAttacks
×

X